கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு இலங்கையில் உள்ள 1,000 சிறை கைதிகள் விடுவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1000 -க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பொது மன்னிப்பு அளித்துள்ளார்.
1000 சிறை கைதிகள்
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 1000 -க்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார்.
istock
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலங்கை அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 1000 -க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
சிறைச்சாலை ஆணையர்
இதுகுறித்து சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க கூறுகையில், "சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 1,004 பேரில் நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவர்" என்றார்.
முன்னதாக, போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது பொலிஸாரால் கைதான 15,000 பேர், பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |