Nvidia-வின் CEO பதவியில் மீண்டும் ஜென்சன் ஹுவாங்: 1.20 லட்சம் பேர் ஆதரவாக கையெழுத்து
1.20 lakhs person's Demanding Jensen Huang’s Reinstatement: என்விடியாவின் CEO பதவியில் மீண்டும் ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்க கோரி 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவாக 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்து
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் CEO ஜென்சன் ஹுவாங்(Jensen Huang)சீன பெண் உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹவாங்(Alice Huang) என்பவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தன்னுடைய CEO பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து தற்காலிக CEO-வாக கோலெட் கிரெஸ்(Colette Kress) நியமிக்கப்பட்ட நிலையில், Nvidia-வின் அடுத்த CEO-வை தேர்ந்தெடுக்கும் பணியில் நிறுவனத்தின் முக்கிய தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் Nvidia நிறுவனத்தின் CEO-வாக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்க கோரி அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவிற்கு எதிராக தொடங்கப்பட்ட இணையவழி மனுவில் ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவாக 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜென்சன் ஹுவாங்கை நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து நீக்கியது எந்த வகையில் நிறுவனத்திற்கு உகந்தது என்பதை நிருபிக்கும் தெளிவான ஆதாரங்களை சமர்பித்து, இது தொடர்பான சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் வரை அவர் மீண்டும் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என கையெழுத்திட்டவர்கள் வழியுறுத்தியுள்ளனர்.
உலகின் முன்னணி பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் இந்த முயற்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மனுவில் தானும் கையெழுத்திட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.