இந்தியா-பாகிஸ்தான் போட்டியை இதில் மட்டும் எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான நேரலை போட்டியை ஹாட்ஸ்டாரில் ஒரு கோடிக்கு மேல் வரை பார்த்துள்ளனர்,
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தின் நேற்றைய இரண்டாம் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக பாகிஸ்தான்-இந்தியா போட்டி என்றாலே உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பும் இருக்கும். அதன் காரணமாகவே அன்று ஒருநாள் மட்டும் ஒளிபரப்பாகும் ஊடகத்தின் டி.ஆர்.பி மதிப்பு எங்கோ சென்றுவிடும்.
இந்நிலையில், இப்போட்டியை ஆப் ஆன HOTSTAR-ல் மட்டும் நேற்று நேரலையின் போது அதிகபட்சமாக 1.2 கோடி பேர் வரை பார்த்தனர்.
இது தான் ஹாட்ஸ்டார் வரலாற்றிலே ஒரு நேரலை சாதனையின் உச்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,