16 வயதிலேயே கோடீஸ்வரியாகி பின் அனைத்தையும் இழந்த பெண்... இன்று எப்படி இருக்கிறார்?
பிரித்தானியாவில், வெறும் 16 வயதே இருக்கும்போது லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்ற ஒரு பெண், பின் அரசின் நிதியுதவியைப் பெற்று வாழும் நிலையை அடைந்தார். .
16 வயதிலேயே கோடீஸ்வரியான பெண்
Callie Rogers லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்றபோது அவருக்கு வெறும் 16வயது.
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே செல்வோரை சோதனையிடும் வேலையில், ஒரு மணி நேரத்துக்கு வெறும் 3.60 பவுண்டுகள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் Callieக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
Credit: Splash
பணம் வந்ததும் காதலும் வந்தது. Nicky Lawson என்பவரை மணந்தார் Callie, 180,000 பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகைக்கு குடிபோனது குடும்பம். இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் காதல் கசந்தது, தற்கொலைக்கு முயன்றார் Callie.
ஒரு கட்டத்தில் பிள்ளைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டார்கள். அப்போதும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக, 17,000 பவுண்டுகள் செலவு செய்து மார்பக அழகு சிகிச்சை செய்துகொண்டார் Callie.
Credit: Splash
நண்பர்கள் என்று கூறிக்கொண்டு ஏராளமானோர் அவருடன் இணைந்துகொண்டார்கள், ஆனால், அவர்கள் நோக்கம் முழுவதும் அவரது பணத்தின் மேலேயே இருந்தது.
கடைசியில் எல்லாம் இழந்து, அரசின் நிதியுதவியை பெறும் நிலையை அடைந்தார் Callie.
போதை படுத்திய பாடு
Cumbria என்ற இடத்தில் அதிவேகத்தில் சென்ற ஒரு காரை துரத்திச் சென்ற பொலிசார், பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி மடக்கிப்பிடிக்கும் அளவுக்கு அந்த காரின் சாரதி கட்டுப்பாடில்லாமல் இருந்தார். காரணம், அவர் கொக்கைன் என்னும் போதைப்பொருளின் கட்டுப்பாட்டில் இருந்தார்.
Credit: News Group Newspapers Ltd
அது, Callieதான். கார் ஓட்ட விதிக்கப்பட்ட நீண்டகால தடைக்குப் பின், தற்போது அவர் அதே Cumbriaவில் கடைக்குச் சென்றுவிட்டு காரில் பயணிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
லொட்டரி நிறுவனங்களுக்கு கோரிக்கை
அவ்வளவு சின்ன வயதில் 1.8 மில்லியன் பவுண்டுகள் என்பது மிகப்பெரிய பணம், பணம் வந்தாலும் வாழ்க்கை மாறாது என்றெல்லாம் பேச்சுக்கு சொல்லலாம். ஆனால், அது உண்மையில்லை, வாழ்க்கை மாறத்தான் செய்கிறது, அதுவும் நல்ல விதமாக அல்ல, அது என்னை உடைத்துவிட்டது என்று கூறும் Callie, லொட்டரி நிறுவனங்கள் லொட்டரி வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18ஆக்கவேண்டும் என்கிறார்.
செவிலியராக முடிவு செய்துள்ள Callie, அதற்காக தற்போது பல்கலைப் படிப்பை மீண்டும் தொடர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |