1 மணி நேரம் சிரிப்பு - பணத்தை அள்ளி இறைக்கும் ஜப்பானிய மக்கள்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உலகளாவிய அரசியல் பதட்டங்கள் அச்சுறுத்திவரும் நிலையில் பாபா வங்காவின் 2023 அணுசக்தி பேரழிவு கணிப்பு திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது.
கனடாவின் காட்டுத் தீயால் பரவியுள்ள புகையால் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் முழுவதும் மாசுபடுவதாக கூறப்படுகிறது.
சிரிக்க மறந்த மக்களுக்கு அதனை கற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஜப்பானிய அரசு மேற்க்கொண்டு வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் சிறிய பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில், பேருந்தில் பயணித்த 9 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அணை ஒன்றை ரஷ்யா சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது உக்ரேனிய மக்கள் குடிநீருக்காக தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.