ஜேர்மனியில் வாழ்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் எத்தனை பேர்?
ஜேர்மனியில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்
ஜேர்மனியில் வாழ்பவர்களில் 21.8 மில்லியன் பேர், அதாவது, 26.3 சதவிகிதம் பேர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்.

அதாவது, நான்கில் ஒருவர் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள் என ஜேர்மன் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விளக்கமாக கூறினால், 16.4 மில்லியன் பேர், முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர். அதாவது, வேறு நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள்.
5.4 மில்லியன் பேர், இரண்டாம் தலைமுறை புலம்பெயர்ந்தோர். அதாவது, ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோருக்கு ஜேர்மனியில் பிறந்த பிள்ளைகள்.
குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் 1.5 மில்லியன் பேர் போலந்து நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், 1.5 மில்லியன் பேர் துருக்கியிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், 1.3 மில்லியன் பேர் உக்ரைனிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், 1 மில்லியன் பேர் ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், 1 மில்லியன் பேர் சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |