ஜேர்மன் இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற திட்டம்
ஜேர்மனியில் வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கின்றன எனக் கூறும் செய்திகள் ஒருபக்கம் வெளியாகிக்கொண்டிருக்க, மறுபக்கமோ, ஜேர்மன் இளைஞர்களே வேறு நாடுகளுக்குச் சென்றுவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்தில் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற திட்டம்
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 14 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட ஜேர்மானிய இளைஞர்களில் ஐந்தில் ஒருவர், அதாவது, 21 சதவிகிதம் பேர், ஜேர்மனியை விட்டு வெளியேற திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

நாட்டின் பொருளாதாரம் அப்படியே தேங்கி நிற்கிறது. ஆனால், வீட்டு வாடகை முதலான செலவுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
AI காரணமாக வேலை கிடைப்பதில் பிரச்சினை, பொருளாதார அழுத்தம் முதலான விடயங்களால் சுதந்திரமாக வாழ இயலவில்லை என இளைஞர்கள் கூறுகிறார்கள்.
இப்படி பொருளாதார பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, அரசியலைப் பார்த்தால், வளர்ந்துவரும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகள், மன நலன் தொடர்பான பிரச்சினைகள் இன்னொருபக்கம் என பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேறு நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுவருவது மட்டுமின்றி, நீண்ட காலம் வெளிநாடுகளில் வாழவும் திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள் ஜேர்மன் இளைஞர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |