லண்டனில் விரைவில் மிகப்பெரிய வேலை நிறுத்தம்: சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்க வாய்ப்பு
பிரித்தானியாவின் லண்டனில் வரும் பிப்ரவரி முதல் திகதியில் இருந்து சுமார் 1 லட்சம் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருக்கும் பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பானது, வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டமானது பணியாளர்களின் வேலை நீக்க விதிமுறைகள், ஓய்வூதியம், ஊதிய விகிதம், பணி பாதுகாப்பு போன்றவற்றில் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதம் வழங்கும் கோரிக்கை ஆகிவற்றை வலியுறுத்தி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Shutterstock
இந்த பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பில், அரசாங்க பணியாளர்களும் மற்ற துறையை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 லட்சம் பேர்
இந்நிலையில் பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பு அறிவித்துள்ள இந்த போராட்டம் பிப்ரவரி முதல் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Twitter