சில நிமிடங்களில் 1 லட்சம் பேர் இணைந்தனர் - அண்ணாமலைக்கு பெருகும் ஆதரவு
அண்ணாமலை அறிவித்த அரசியல் இயக்கத்தில் சில நிமிடங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.
சில நிமிடங்களில் 1 லட்சம் பேர்
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து விளக்கி 5 பக்க ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தற்போது அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், தனது புதிய அரசியல் இயக்கம் குறித்து பேசியுள்ளார்.

இதில் பேசிய அவர், "ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன்.
அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க முடியுமான்னு 17 ஆண்டுகளாக போராடிகிட்டே இருக்கேன். வளர்ந்த பாரதம் எனும் கனவோடு அரசியல் இயக்கம். வளர்ந்த பாரதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும்.
நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்.பி, எம்.எல்.ஏ கிடையாது. புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன். புதிய அரசியலை கட்டமைக்க உள்ளேன். அரசியலுக்கு புதியவர்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். அடுத்து வரும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்.
கோயம்புத்தூரில் abdul kalam centre for ethics and politics என்ற பெயரில் அரசியல் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அங்கு முறையான பயிற்சி வழங்கப்படும். அரசியல் இயக்கம் சரியான நேரத்தில் கட்சியாக மாறும்.
we the Leaders என்ற அமைப்பில் நீங்கள் தன்னார்வலராக இணைத்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, we the Leader அமைப்பின் இணையதள லிங்க்கை பகிர்ந்துள்ளார்.
Let’s step up, take action, and be the change.
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
Join here to begin our political movement! https://t.co/oVURDAxIE7 https://t.co/XROXxAohTq
லிங்கை பகிர்ந்த 15 நிமிடத்திற்குள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துகொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |