1 ரூபாய் நோட்டு ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்
ஓன்லைனில் நடத்தப்படும் ஏலங்களில் பழைய 1 ரூபாய் நோட்டு ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.7 லட்சத்துக்கு விற்பனையா?
கடந்த 1917-ம் ஆண்டு நவம்பர் 30-ம் திகதி அன்று முதல் முறையாக பழைய 1 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர், கடந்த 1926-ம் ஆண்டில் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் 1940-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.
இதையடுத்து, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1994-ம் ஆண்டில் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டு, 2015-ம் ஆண்டில் மீண்டும் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஓன்லைனில் நடத்தப்படும் ஏலங்களில் 1 ரூபாய் நோட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சுதந்திரத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுகள் சிலரிடம் மட்டுமே இருப்பதால் அதிக அளவு டிமாண்ட் உள்ளது.
இதனால், ஓன்லைனில் நடத்தப்படும் ஏலங்களில் பழைய ஒரு ரூபாய் நோட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், ஒரு ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாங்குவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஓன்லைனில் சட்டவிரோதமாக ஏலங்கள் நடத்தப்படுகின்றன.
இதனால் வரும் பிரச்சனைகளை சந்திப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |