மன்னர் முடிசூட்டு விழா அழைப்பிதழ்: முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட ”ராணி கமிலா” என்ற பட்டம்
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா அழைப்பிதழ்களில் “ராணி கமிலா” என்ற தலைப்பு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா
மகாராணி கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ், நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா 2023ம் ஆண்டு மே 6ஆம் திகதி ராஜ முறைப்படி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
AP
இதற்கான முறைப்படியான அழைப்புகள் அரச குடும்பத்திடம் இருந்து 2000 முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் செவ்வாயன்று மன்னருடனான தொலைபேசி அழைப்பில் முறைப்படி அழைக்கப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
முடிசூட்டு விழா அழைப்பிதழ்
இதற்கிடையில் பக்கிங்ஹாம் அரண்மனையால் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான அழைப்பிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Buckingham Palace/sky News
கலைஞர் ஆண்ட்ரூ ஜேமிசன் வடிவமைத்துள்ள இந்த முடிசூட்டு விழா அழைப்பிதழ்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டையில் அச்சடிக்கப்பட்டு வனவிலங்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா அழைப்பிதழில் அறிவிக்கப்பட்ட எட்டு பக்க மரியாதை பெயர்களில் ஒருவராக வருங்கால மன்னர் இளவரசர் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ராணி கமிலா
மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்டதில் இருந்து ”ராணி கன்சார்ட் கமிலா” என்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டு நிலையில், தற்போது முதல் முறையாக மன்னரின் முடிசூட்டு விழா அழைப்பிதழ்களில் ”ராணி கமிலா” என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
Buckingham Palace/sky News
பக்கிங்ஹாம் அரண்மனையால் வெளியிடப்பட்டுள்ள மன்னரின் முடிசூட்டு விழா அழைப்பிதழ்களில் "ராணி கமிலா" என்ற பட்டம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
முடிசூட்டு விழா அழைப்பிதழில் மன்னர் சார்லஸ்-க்கு எதிராக ராணி கமிலா என்று பயன்படுத்துவது பொறுத்தமாக இருக்கும் எனவும், ராணி கமிலா என்ற பட்டத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்க முடிசூட்டு விழா சரியான தருணம் என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.