10,000 ரூபாயை 4,000 கோடியாக மாற்றியவர்.., பல துறைகளில் தடம் பதித்து சாதித்த பெண்மணி யார்?
ரூ.10,000 முதலீட்டை வைத்து தற்போது ரூ.4,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வரும் பெண்ணை பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
ஷஷி சோனி (Shashi Soni) என்ற பெண் ஒருவர், ரூ.10,000 முதலீட்டில் தனது வணிகத்தை தொடங்கி இன்று பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளார்.
இவர், தனது முதல் வணிகத்தை 1971 -ம் ஆண்டு ரூ.10,000 முதலீட்டில் Deep Transport என்ற நிறுவனம் தொடங்கி ஆரம்பித்தார்.
இதன்பின்னர், 1975 -ம் ஆண்டு மும்பையில் உள்ள முலுந்த் பகுதியில் தீப் மந்திர் என்னும் சினிமா தியேட்டரை நிறுவினார். இந்த தியேட்டர் 1980 -ம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு கடும் சிரமத்திற்கு உள்ளானார்.
அதன் பிறகு மைசூரில் ஆக்ஸிஜன் பிரைவேட் லிமிடெட் எனும் கேஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இது தான் அவரது எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக இருந்தது. இதனை தொடர்ந்து டெக்னிகல் துறையில் நுழைந்தார்.
2005 -ம் ஆண்டில் மைசூரை தலைமையிடமாகக் கொண்டு IZMO லிமிடெட் என்ற பெயரில் சாப்ட்வேர் நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனமானது உலகளவில் உயர் தொழில்நுட்ப ஆட்டோமோட்டிவ் மற்றும் ஆன்லைன் ரீடைல் விற்பனை தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக Shashi Soni உள்ளார்.
பத்மஸ்ரீ விருது
வணிகத்தை தவிர Shashi Soni சமூக செயல்பாடுகளிலும் ஈடுபாடு உடையவர். ஜனசேவா சமிதியின் உறுப்பினராகவும் உள்ளார். வேலை வாய்ப்புகள், பெண்களுக்கான கல்வி உள்ளிட்ட விடயங்களில் தீவிரமாக செயல்பாடு கொண்டவர்.
இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர்களின் பட்டியலில் வணிக உலகில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களில் Shashi Soni ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |