சுவிற்சர்லாந்து பல்சமய இல்லத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா
பல்சமய இல்லம் தொடங்கப்பட்டு 14.12.2024 அன்றுடன் பத்தாண்டுகளை நிறைவுசெய்கின்றது.
அதனைக் கொண்டாடும் வகையில் 20.10.2024 முதல் 14.12.2024 வரை பத்துப்பகுதிகளாக நிறைவுவிழா நிகழ்வுகள் கட்டங்கட்டமாகக் பல்சமயக்கட்டடத்தில் நடைபெற்றுவருகின்றது.
அந்தவகையில் 01.12.2024 ஞாயிற்றுக்கிழமை leiterin frau Laila (தலைமையில்) Janine அவர்களுடன் அருளினி முருகவேள் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கு பற்றியிருந்தனர்.
பலநாடுகளின் பலமக்கள் பங்குபற்றி பல நிகழ்வுகளை நிகழ்த்தி மனநிறைவுடன் சென்றார்கள்; இந்த நிகழ்வில் அதிகமான சிறார்களை இணைத்து பல நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்டத்தக்கது.
இதனால் இளைய தலை முறையினரின் சிறார்கள் அதிகமாக வருகைதந்திருந்தனர். தமது மதங்கள் கடந்த ஓர் உயர்வான புரிதலை உணர்ந்து பன்னாட்டு மக்களுடன் இணைந்துவாழும் பட்டறிவினைப் பெற்றுக் கொண்டார்கள்.
இது பல்சமய இல்லத்தின் உயர் நோக்கத்தை வெற்றிகொள்ளச்செய்ததாக இருந்தது. இந்த விழாவின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக அலேவித்தன் சமயத்தவர்களது இசை நடனம் மற்றும் நாடகம் என்பவற்றுடன் குறும் நேர்த்தியான பட்டறை தமிழ் மற்றும் பகாய்(Bahai) ஆகியமொழிசார் பட்டறைகளும் கோலம் பற்றிய பட்டறைகளும் கிப் கொப் நடனப்பட்டறைகளும் நத்தார் பண்டிகைக் கதைகளும் சிறுவர்களுக்கான கைவேலைப்பாடுகள் படங்கள் வரைதல் போன்ற (கைவினைகள்) மற்றும் Ukrainisch -Russischer Brunch (உக்றையின் ,ரசியா) ஆகிய நாடுகளின் உணவுவகைகளும் பல்சமய இல்லத்தில் வணக்கம் உணவகத்தில் (Vanakkam Restaurant) விற்பனையாகியது.
இந்த நிகழ்வில் எல்லோரும் விரும்பிய நிகழ்வாக தனியங்கி படப்பிடிப்பு கருவி மூலம் தங்கள் ஒளிப்படங்களை சிறுவர்கள் பெரியோர்கள் தனியாகவும் குழுக்களாகவும் படங்களை எடுத்துக்கொண்டார்கள். இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியளித்ததை உணரமுடிந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |