இங்கிலாந்தை வந்தடைந்த புலம்பெயர்வோர் படகு: 10 பேர் கைது
Ten arrested after boat carrying migrants arrives ashore at tiny UK tourist hotspot: புலம்பெயர்வோர் படகொன்று பிரித்தானியாவிலுள்ள சிறிய நகரமொன்றை வந்தடைந்த நிலையில், 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்
கடந்த திங்கட்கிழமையன்று, சிறுபடகொன்று அதிகாரிகள் யார் கண்ணிலும் படாமல் இங்கிலாந்தை வந்தடைந்தது.
யார் கண்ணிலும் படாமல்...
ஐந்து புலம்பெயர்ந்தோருடன் கென்டிலுள்ள Folkestone என்னும் இடத்திலுள்ள கடற்கரையை வந்தடைந்தது அந்தப் படகு.

இந்நிலையில், மீண்டும் ஒரு படகு இங்கிலாந்தின் Falmouth என்னும் சிறு நகரிலுள்ள துறைமுகம் ஒன்றை வந்தடைந்துள்ளது.
அதாவது, வழக்கமாக புலம்பெயர்வோர் வந்தடையும் இடங்கள் இல்லாமல், இப்போது வெவ்வேறு இடங்களுக்கு வரத் துவங்கியுள்ளார்கள் புலம்பெயர்வோர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு படகொன்றில் 20 பேர் வந்து சேர்ந்த நிலையில், தகவலறிந்து பொலிசார் அங்கு வரும்போது, அதிகாலை 3.00 மணி ஆகியுள்ளது.

18 பேர் வேன் ஒன்றில் தப்பியோடிவிட்ட நிலையில், இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள் பொலிசார்.
அதைத் தொடர்ந்து, ஹெலிகொப்டர் ஒன்று மற்றும் கடலோரக்காவல் படை உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், மேலும் 8 பேரைக் கைது செய்துள்ளார்கள். மற்றவர்கள் நிலை தெரியவில்லை.