10 பில்லியன் ஃப்ராங்குகளை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சுவிஸ் மக்கள்... தெரியவந்தது எப்படி?
சுவிஸ் மக்கள், 10 பில்லியன் ஃப்ராங்குகளை கடந்த சில ஆண்டுகளாக படுக்கைக்கடியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்
சுவிஸ் வங்கிகளில் வட்டி விகிதம் உயரத் துவங்கியதையடுத்து, மக்கள் மீண்டும் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யத் துவங்கியுள்ளார்கள்.
மாயமான 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்
சுவிஸ் வங்கி வெளியிட்ட பணத்தில், சுமார் 10 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் புழக்கத்தில் இல்லாமல் போயின. அதாவது, அந்தப் பணத்தை மக்கள் தங்கள் வீடுகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தொகை, சுவிட்சர்லாந்தின் மொத்த பொருளாதாரத்தில் 10 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, 1,000 மற்றும் 200 சுவிஸ் ஃப்ராங்க் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் வீடுகளில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
இப்போது வட்டி விகிதம் உயரத் துவங்கியதையடுத்து, மீண்டும் மக்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யத் துவங்கியதால் தற்போது இந்த உண்மை வெளிவந்துள்ளது.