உ.பி மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு.., கண்ணீருடன் கதறும் பெற்றோர்
உத்தரபிரதேச மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 குழந்தைகள் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 15 முதல் 20 குழந்தைகள் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடைபெற்றதை அறிந்ததும் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்று தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டன.
குழந்தைகளின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் பெற்றோர்கள் கதறி அழுகின்ற காட்சிகளும் இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளன.
இதில், காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்திற்கான காரணம் மின்கசிவு என்று முதற்கட்ட தகவல் வந்துள்ளது. இந்த விபத்திற்கான நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
झाँसी मेडिकल कॉलेज में दस नवजात बच्चे ज़िंदा जल गये.
— Neha Singh Rathore (@nehafolksinger) November 16, 2024
क्या लिखूँ इस पर..! भक्क! 😭
गला फाड़-फाड़ के चिल्लाती रहती हूँ कि स्वास्थ्य-सेवाएँ सुधारों…और बदले में गालियाँ दी जाती हैं.
हिंदू बचाने आये हैं ये! नीच कहीं के!#jhansimedicalcollege pic.twitter.com/ayZKU0vGjP
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |