பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உணவகத்தில் இருந்த 10 பேருக்கு அபராதம்! என்ன காரணம் தெரியுமா?
பிரான்ஸ் தலைநக பாரிசில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் இருந்த 10 பேருக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.
பிரான்சில் கொரோன வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்பாடுகளை மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள Île de la Cité பகுதியில், இருக்கும் உணவகம் ஒன்றில், கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் குறித்த உணவகத்துக்குள் 10 பேர் வரை இருந்துள்ளதால் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி, பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் குறித்த உணவகம் அடுத்த 15 நாட்களுக்கு மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டும் தலைநகர் பாரிசில் 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.