வயதானாலும் இளமையாக இருக்க சாப்பிடவேண்டிய 10 உணவு வகைகள்
முதுமை என்பது தவிர்க்க முடியாத இயற்கையான நிகழ்வு. வயதான செயல்முறையை நம்மால் மாற்ற முடியாது, ஆனால் தினசரி சில பொருட்களை உணவில் சேர்ப்பதன் மூலம் வயதான தோற்றம் பெறுவதை மெதுவாக்கலாம்.
வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் விருப்பம்தான்.
இதற்காக இப்போது அழகு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை போன்றவைகளும் வந்துவிட்டன.
ஆனால் உடற்பயிற்சிகளும்,உணவு பழக்கவழக்கங்களும் இயற்கையாக இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.
இளமையாக இருக்க சாப்பிடவேண்டிய 10 உணவுகள்
1. முட்டை-இதில் புரோலின், லைசின், அமினோ அமிலங்கள் உள்ளன.
2. மட்டன்/சிக்கனின் எலும்பு சூப்
3. மீன் குறிப்பாக சாலமன், மாக்கேரல், டூனா மீன்கள்-ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்தது.
4. எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகைகள்.
6. கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள்
7. குடைமிளகாய்-வைட்டமின் சி நிறைந்தது.
8. அவகோடா பழங்கள்- வைட்டமின் இ, வைட்டமின்சி உள்ளது.
9. பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றம் சியா, பிளக்ஸ் விதைகள்.
10. சோயா நிறைந்த உணவு வகைகள்.
இந்த உணவுகள் அனைத்துமே ''கொலாஜன்'' என்ற புரோட்டின் நிறைந்தது. இவை சருமம் வயதாகுவதை தடுத்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |