மறந்தும்கூட குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளை கொடுத்து விடாதீர்கள்
குழந்தைகளின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு வளரும் வயதில் சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவானது ரொம்ப முக்கியமான ஒன்று.
ஆனால் இக்காலத்து குழந்தைகள் காய்கறிகள், பழங்கள் என்ற ஊட்டச்சத்துள்ள பொருள்களை தவிர்த்து பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிடுகின்றன.
Crystal karges
குழந்தைகள் சத்தாக வளர வேண்டும் என்றால் அவர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
கொடுக்கக்கூடாத உணவுகள்
குளிர்பானங்கள் இது உடல் எடையை அதிகரிக்கும், பற்கள் சொத்தையாகும்.
பிஸ்கட் மற்றும் சாக்லேட்கள் இதுவும் பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ஸ்நாக்ஸ் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளை குழந்தைகள் உண்பதன் மூலம் உடலில் உப்புச்சத்து மற்றும் கொழுப்பை அதிகரிக்கும்.
பிரெஞ்ச் பிரைஸ், பிரைட் சிக்கன் எண்ணெயில் பொரித்த உணவுகள் தேவையற்ற கொழுப்புகளை உடலில் சேர்க்கும்.
பாஸ்ட் புட் இதில் பெரும்பாலும் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லாததால் உடல் எடையை அதிகரிக்கின்றன.
பிட்சா, பர்கர் இந்த உணவுகள் இதயத்தில் பிரச்னைகளை உண்டாக்கும்.
காபி குழந்தைகளின் தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
செயற்கை இனிப்புகள் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி இதில் சோடியம் அதிகம் இருப்பதால் அலர்ஜியை ஏற்படுத்தும்.
சமைக்காத உணவுகள் வேகவைக்காத முட்டை, இறைச்சி , கடல் உணவுகள் போன்ற சமைக்காத உணவில் உள்ள பாக்டீரியா மூலம் நோய்கள் பரவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |