நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாத 10 பழங்கள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சில பழங்களை எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்ற பயம் இருக்கும்.
அந்தவகையில், உடலில் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாத 10 பழங்கள் குறித்து பார்க்கலாம்.
பெர்ரி வகை பழங்கள்
பெர்ரி வகை பழங்கள் குறைவான இனிப்பு சுவையை கொண்டது. மேலும் இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து டயாபடீஸ் நோயாளிகள் சாப்பிடுவதற்கு சிறந்த பழமாக இருக்கிறது.
ஆப்பிள்
மிதமான அளவு சர்க்கரை இருந்தாலும் ஆப்பிள் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. ஆகையால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம்.
Nadine Greeff/Stocksy
பேரிக்காய்
பேரிக்காயிலும் குறைவான சர்க்கரையும் அதிக நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இந்தப் பழத்தை சாப்பிடுவதற்கு மொறுமொறுப்பாக இருப்பதால் மாலை நேர ஸ்னாக்ஸாக இதை சாப்பிடலாம்.
செர்ரி பழங்கள்
செர்ரி பழங்களில் சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கும். மேலும் செர்ரி பழங்களில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ளதால் உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க இது உதவும்.
Pixabay
பீச் பழம்
சுவை மிகுந்த பீச் பழத்தில் குறைவான சர்க்கரையும் அதிகளவு நார்ச்சத்தும் உள்ளது. இதனால் டயாபடீஸ் நோயாளிகள் இதை தாராளமாக தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
ப்ளம்ஸ்
சுவையான ப்ளம்ஸில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகளவு உள்ளது. இந்தப் பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஓட்ஸ் உணவு அல்லது சாலடில் கலந்து சாப்பிடுவதற்கு சிறந்ததாக இருக்கும்.
க்ரேப்ஃப்ரூட்
க்ரேப்ஃப்ரூட் குறைவான சர்க்கரை அளவை கொண்டது. இந்தப் பழத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது.
கிவி
குறைவான சர்க்கரை மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட கிவி பழத்தை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். கிவி பழத்தில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் குறைவான சர்க்கரை அளவே உள்ளது. மேலும் இதில் அதிகளவு வைட்டமின் சி இருப்பதால், இதை சாபிட்டதும் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
அவகோடா
குறைவான சர்க்கரை கொண்ட அவகோடாவில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்பு அதிகமுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |