10 தலை கொண்ட 'ராவணன்' ராகுல் காந்தி: பாஜக - காங்கிரஸ் போஸ்டர் யுத்தம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் போஸ்டரை பகிர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக விமர்சனம் செய்து வருகின்றனர்.
போஸ்டர் யுத்தம்
சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பற்றி விமர்சனங்கள் வருவது சகஜம் தான்.
அந்த வகையில், காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து மிகப்பெரிய பொய்யர் என்று கூறி பதிவிட்டிருந்தனர்.
Going to hit the election rally soon. pic.twitter.com/GCWWr2bwxi
— Congress (@INCIndia) October 4, 2023
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ராகுல் காந்தியை 10 தலை கொண்ட ராவணன் போல சித்தரித்து, புதிய யுக ராவணன் தீயவர், தர்ம எதிர்ப்பு, ராம் எதிர்ப்பு, பாரதத்தை அழிக்க அவதரித்துள்ளார் என குறிப்பிட்டனர்.
The new age Ravan is here. He is Evil. Anti Dharma. Anti Ram. His aim is to destroy Bharat. pic.twitter.com/AwDKxJpDHB
— BJP (@BJP4India) October 5, 2023
காங்கிரஸ் எதிர்ப்பு
இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கிடுகு ருத்ர ராஜு மற்றும் ஜெய்ராம் ரமேஷ் பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ராகுல் காந்தியை ஒரு கொடூரமான கிராஃபிக் மூலம் ராவணனாக சித்தரித்திருப்பதன் உண்மையான நோக்கம் என்ன? இந்தியாவை பிளவுபடுத்த விரும்பும் சக்திகளால் தந்தை மற்றும் பாட்டி படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.,யுமான ராகுல் காந்திக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கம் என தெளிவாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி பொய் சொல்லும் நோயால், நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி டிஸார்டரால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் அளிப்பதில் இதுவும் ஒன்று. ஆனால், அவர் தனது கட்சியை இந்த அருவருக்கத்தக்க ஒன்றை உருவாக்குவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, ஆபத்தானது. நாங்கள் பயப்பட மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |