தினமும் 9 மணி நேரம் தூங்கினால் 10 லட்ச ரூபாய்.., நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் சலுகை
நிறுவனம் ஒன்றின் internship சலுகையில் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
internship சலுகை
தூங்குவதற்கு உங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நாட்டின் பிரபலமான தளபாடங்கள் மற்றும் மெத்தை உற்பத்தி நிறுவனமான வேக்ஃபிட் (Wakefit) ஒரு தனித்துவமான பயிற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
Wakefit நிறுவனம் அறிமுகப்படுத்திய 4-வது சீசன் "Sleep Internship"-ல் புனேவைச் சேர்ந்த பூஜா மாதவ் வவல் என்பவர் ரூ.9.1 லட்சம் சம்பாதித்த நிலையில் தற்போது 5வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நிறுவனத்தின் புதிய மெத்தைகளில் தினமும் 9 மணி நேரம் தூங்கிய பின்னர், மெத்தைகள் குறித்த அனுபவத்தை நிறுவனத்திடம் சொல்ல வேண்டும்.
இதில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு Wakefit Sleep Internship தளத்தில் விண்ணப்பித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும். பின்னர் அதில் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |