Netflix பாவிப்பதை தவிர்த்த 10 லட்சம் பயனர்கள்; பயனர்களை இழந்த நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 10 லட்சம் பயனர்களை இழந்துள்ளதாக ஆய்வின மூலம் தெரியவந்துள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ்
அதன்படி அமெரிக்காவில் 14 ஏப்ரல், 1998 அன்று ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் ஆன்லைன் மூலமாக டிவிடியை வாடகைக்கு விடும் சேவை நிறுவனமாக தொடங்கப்பட்டதுதான் நெட்ஃபிளிக்ஸ்.
சொந்த படங்கள் மட்டுமின்றி இணையத்தொடர் தயாரிப்பிலும் வெளியிடத்தொடங்கியது.
இந்த அப்பை தொலைப்பேசி மற்றும் மடிக்கணணி என பல சாதனங்களில் உபயோகிக்கலாம்.
நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவான பல்வேறு படங்கள் சர்வதேச விருதுகளை வாங்கியுள்ளது.
இவ்வாறு இருக்கையில் இதை பயன்படுத்துவதற்கு கட்டணம் கட்டப்பட வேண்டும்.
ஆகவே ஒரு சிலர் தனது ஒரு கணக்கை வாங்கி உபயோகித்தாலும் அதை தனது நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள்.
ஆகவே நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது. இனி யாராலும் கடவுச் சொல்லை பகிர்ந்துக் கொள்ள முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்
கணக்கை பகிர்ந்துக் கொள்ள தடுத்ததால் பயனர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் தற்போது 10 லட்சத்திற்கு மேலான பயனர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.