10 மாத குழந்தைக்கு அரசுப் பணி! வரலாற்றில் இதுதான் முதல் முறை
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் பெற்றோரை இழந்த 10 மாத குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் ராஜேந்திர குமார் என்பவர் ரயில்வே யார்டில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் 1ஆம் திகதி ராஜேந்திர குமாரும், அவரது மனைவியும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களது 10 மாத பெண் குழந்தை உயிர்தப்பியது.
இந்த நிலையில், அந்த குழந்தைக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே பதிவேடுகளில் குழந்தையின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு 18 வயது ஆகும்போது தேசிய போக்குவரத்து துறையில் பணி அமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருணை அடிப்படையில் குழந்தைக்கு அரசு பணி அளிக்கப்படுவது வரலாற்றில் இதுதான் முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெற்றோரை இழந்த அந்த குழந்தைக்கு, ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தால் அனைத்து உதவிகளுக்கு விதிகளின்படி வழங்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.