பிரபல நடிகர் பண்ணை வீட்டில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வெளிவந்த உண்மை தகவல்
பிரபல நடிகர் தர்ஷனின் பண்னை வீட்டில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தர்ஷன். இவருக்கு மைசூரு அருகே சொந்தமாக பண்ணைத்தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு இவர் பல குதிரைகளை வளர்த்து வருகிறார்.
இவருக்கு ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஓய்வு எடுக்க பண்ணை வீட்டிற்கு சென்று குதிரை சவாரி செய்வது வழக்கம். அவர் வளர்கின்ற குதிரைகளை பராமரிக்க அங்கு சிலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சிவமூக்கா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்த பண்ணை தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பத்து வயது மகளை குதிரை பராமரிப்பாளர் நசீம் என்பவர் கடந்த 13 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நசீம் என்பவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த சம்பவத்தை குறித்து சிறுமி அழுது கொண்டே அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பொலிஸ் போக்ஸோ சட்டத்தில் கீழ் நசீமை கைது செய்துள்ளனர். நடிகருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.