ஜேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஜேர்மனியில், ஆறு ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்தவர்களை மின்னல் தாக்கியதில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மின்னல் தாக்கி 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Image: Benedict Bartsch/xcitepress/dpa/picture alliance
ஜேர்மனியின் Dresden நகரில், திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்யும்போது, Elbe என்னும் நதியினருகில் சிலர் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அவர்களை மின்னல் தாக்கியுள்ளது. அதில், 26 முதல் 41 வயது வரையுள்ள 7 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளார்கள். மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து அவர்களில் இரண்டுபேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவசர உதவிக்குழுவினர் அவர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்றியுள்ளார்கள்.
Image: Benedict Bartsch/xcitepress/dpa/picture alliance
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அப்பகுதியில், வேறு யாராவது மின்னலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிவதற்காக, ஹெலிகொப்டர் ஒன்றும் அப்பகுதியில் பறந்து சோதனை மேற்கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |