பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்...! ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்
பத்தாம் வகுப்பு படித்திருந்தால் தமிழகம் முழுவதும் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஓட்டுநர்கள் பணி
தேனி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள 150 அரங்கத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு கூடாமலும் இருக்க வேண்டும்.
இலகுவாக வாகன ஓட்டுநர் உரிமம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஊதியத்தில் அமர்தப்படுபவர்களுக்கு ரூபாய் 15,820 சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு,மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்த தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்
தகுதிகள்
BSc Nursing, GNM, ANM , DMLT அல்லது ife science BSc Zoology , Botany, Bio- Chemistry ,Micro biology ,Bio technology இதில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
மாதம் ஊதியம் ரூபாய் 16,080 வரை வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு கூடாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு.
இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள 044- 28888060 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |