ஆரோக்கியமான வாழ்க்கைக்கு.. மருத்துவர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்
உங்களுடைய தினசரி வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் உங்களது உடல்நலனில் பெரிய அதிசயத்தை நிகழ்த்திவிடும் என நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம் நரம்பியல் நிபுணரான டாக்டர் Priyanka Sehrawat, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டிய 10 மாற்றங்கள் குறித்து பரிந்துரைத்துள்ளார்.

அது என்னவென்று பார்க்கலாம்,
Ketchup பயன்படுத்துவதற்கு பதிலாக புதினா சட்னியை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என கூறுகிறார், வீட்டில் தயாரிக்கப்பட்ட புதினா சட்னி உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள், இதிலுள்ள நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருகிறது.
மைதா மாவிற்கு பதிலாக முழு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம், கோதுமை ரொட்டி சாப்பிடலாம், அத்துடன் சிறுதானியங்களை எடுத்துக்கொள்வது இன்னும் பல சிறப்பான நன்மைகளை கொடுக்கும்.
சர்க்கரை, இனிப்புக்கு மாற்றாக வெல்லத்தை பரிந்துரைக்கிறார், பெரும்பாலும் இயற்கையாக வெல்லம் தயாரிக்கப்பட்டாலும் அளவோடு எடுத்துக்கொள்வது சிறந்தது என்கிறார்.
பிஸ்கட்டுகளுக்கு பதிலாக பன்னீர் சாலட், முளைக்கட்டிய பயறு வகைகள், வால்நட், பாதாம் போன்ற ஆரோக்கியமான முறையில் சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக அலுமினிய பாத்திரங்களுக்கு பதிலாக stainless steel or cast iron பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கிறார், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி அல்லது steel பாட்டில்களை பயன்படுத்துமாறும் கூறுகிறார்.
சமையல் பாத்திரங்கள் மட்டுமின்றி சமையல் எண்ணெயில் கவனம் தேவை, cold-pressed coconut oil, mustard oil அல்லது olive oil பயன்படுத்துங்கள்.
இவை அனைத்தையும் விட முக்கியமான நிம்மதியான உறக்கம், இரவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு புத்தகங்கள் படிப்பது என உங்களது மூளையை மிக அமைதியாக்கிவிட்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
இந்த மாற்றங்கள் உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் சிறிது சிறிதாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்கிறார் Dr Priyanka Sehrawat
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |