பொடுகு தொல்லையை போக்கும் சூப்பரான 10 டிப்ஸ் இதோ!
குளிர்காலம் வந்துவிட்டாலே சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் ஒன்று தான் பொடுகு தொல்லை.
பொடுகு என்பது உச்சந்தலையை பாதிக்கும் ஒரு தோல் பிரச்சினையாகும். பொடுகுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.
தேயிலை மர எண்ணெய், உணவுமுறை மாற்றங்கள் மற்றும் பேக்கிங் சோடா போன்ற இயற்கை வைத்தியங்கள் மூலமாகவும் விரட்டலாம்.
பெரும்பாலும் பொடுகானது உச்சந்தலையில் அதிகரிக்கும். குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போகாமல் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பொடுகு தொல்லையை போக்கவும் வீட்டு வைத்தியத்திலேயே பல வழிகள் உள்ளன. அது பற்றி பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூர மசாஜ்
மிதமான சூட்டில் உள்ள தேங்காய் எண்ணெயோடு கற்பூரத்தை சேர்த்து தலையில் மசாஜ் செய்யவும். அதை 30 நிமிடத்திற்கு காய வைத்து கழுவினால் நீங்கும்.
ஆப்பிள் சிடர் வினிகர்
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீரை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தலைக்கு பூசவும். ஷாம்பூ போட்ட பிறகு இந்த கலவையை பயன்படுத்தி முடியை கழுவுவது நல்லது.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து முடியை கழுவினால் பொடுகு நீங்கும்.
வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெயை உச்சந்தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து முடியை கழுவவும்.
யோகர்ட் மாஸ்க்
யோகர்டை தலைமுடியில் தடவி அப்படியே 30 நிமிடங்கள் காயவிட்டு பின் கழுவவும்.
வாசனை எண்ணெய்
யூக்கலிப்டஸ் ஆயில், டீ ட்ரீ ஆயில், லாவெண்டர் ஆயில் போன்றவற்றோடு கேரியர் எண்ணெயையும் கலந்து, உச்சந்தலையில் தடவினால் பொடுகு நீங்கும்.
வெந்தய பேஸ்ட்
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அதை பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும். அதை உச்சந்தலையில் தேய்த்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
பேகிங் சோடா
பேகிங் சோடா மற்றும் தண்ணீரை பயன்படுத்தி பேஸ்ட் போல் செய்து உச்சந்தலையில் பூசவும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். மற்றும் பொடுகும் நீங்கும்.
ஜோஜோபா ஆயில்
இதை உங்கள் உச்சந்தலையில் தேய்ப்பதன் மூலம் தலைக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. எனவே பொடுகும் ஏற்படாது.
டயட்
டயட்டில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின், தாதுக்கள் உள்ள உணவை தினசரி சேர்த்துக்கொள்ளவும். இது உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |