லண்டனில் இருக்கும் பிரித்தானியாவின் சிறந்த 10 புதிய உணவகங்கள்
லண்டனில் இருக்கும் பிரித்தானியாவின் சிறந்த 10 புதிய உணவகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Condé Nast Traveller வெளியிட்ட பிரித்தானியாவின் சிறந்த புதிய உணவகங்கள் பட்டியலில் 21 உணவகங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் 10 உணவகங்கள் லண்டனிலேயே உள்ளன, குறிப்பாக M25 சாலை வட்டாரத்திற்குள், பெரும்பாலும் Zone 3 பகுதிக்குள் அமைந்துள்ளன.
இந்த பட்டியலில் உள்ள பல உணவகங்கள் Time Out வெளியிட்ட லண்டனின் 20 சிறந்த புதிய உணவகங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.
உதாரணமாக, AngloThai (Marylebone), Lita (Marylebone), Miga (Hackney), Oma (Borough), Tollington’s (Finsbury Park) ஆகியவை இரு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன.
இந்த தேர்வுகளை சிறந்த சமையல் கலைஞர்கள் (Chefs) மற்றும் உணவு விமர்சகர்கள் குழு தேர்வு செய்துள்ளனர்.
இதில் புகழ்பெற்ற Raymond Blanc OBE, Jackson Boxer, Gizzi Erskine, Tom Parker Bowles, மற்றும் TikTok நட்சத்திரம் Poppy O'Toole உள்ளிட்டோர் உள்ளனர்.
Condé Nast Traveller தேர்வு செய்த லண்டனின் சிறந்த புதிய உணவகங்கள் (2025):
- Ambassadors Clubhouse, Mayfair
- AngloThai, Marylebone
- Camille, Borough
- Canteen, Notting Hill
- Fonda, Mayfair
- Josephine Bouchon, Chelsea
- Lita, Marylebone
- Miga, Hackney
- Oma, Borough
- Tollington’s, Finsbury Park
இந்த பட்டியல் லண்டனின் உணவுப் பிரியர்களுக்கு புதிய, தனித்துவமான உணவகங்களை அனுபவிக்க ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |