காருடன் மாயமான 10 வயது சிறுவன்: அதிர்ச்சியடைந்த தாய்..கமெராவில் கண்ட காட்சி
அமெரிக்காவில் தாயுடன் சண்டையிட்ட 10 வயது சிறுவன் மாயமான பின்னர், அவரே காரை எடுத்துக்கொண்டு தந்தையின் வீட்டிற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மாயமான சிறுவன்
டென்னஸீ மாகாணத்தில் 10 வயது சிறுவன் தனது தாயுடன் சண்டையிட்ட பிறகு, காருடன் காணாமல் போனதாக பொலிஸாருக்கு தெரிய வந்தது. 
அதனைத் தொடர்ந்து, பொலிஸார் திருடப்பட்ட காரை ட்ராக் செய்தபோது அது சிறுவனின் குடும்ப வீட்டிற்கு திரும்பியது தெரிய வந்தது.
பின்னர் குறித்த சிறுவனின் தந்தை, ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர். ஆகையால், அவர் காரை திருடியதாக சந்தேகித்து அவரை காவலில் வைக்க பொலிஸார் நினைத்துள்ளனர்.
ஆனால், சிறுவனின் தாயார் தனது மகனை இயக்கத்தில் இருந்த காரில் அமர வைத்துவிட்டு, பாடசாலைக்குள் சென்றுள்ளார்; அவர் திரும்பி வந்து பார்த்தபோதுதான் அவன் காணாமல் போனது தெரிய வந்ததாக கூறினார்.
அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதுதான், பாடசாலையின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு வாகனம் கவனக்குறைவாக பின்னோக்கி சென்றதாகவும், வெளியே செல்லும்போது மற்றொரு காரின் மீது கிட்டத்தட்ட மோதியதைக் கண்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
கமெராவில் பார்த்தபோது
பின்னர் பாடசாலையின் கண்காணிப்பு கமெராவில் பார்த்தபோது, இயக்கத்தில் இருந்த காரை யாரும் நெருங்கவில்லை என்பதும், சிறுவன்தான் காரை ஒட்டிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் நம்பினர்.
பாடசாலையில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள குடும்பத்தினரின் வீட்டில், கேரேஜில் கார் நிறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சிறுவன் வீட்டிற்குள் காயமின்றி, அவனது தந்தையுடன் இருந்தான்.
அவன் தனியாக வீட்டிற்கு வந்தபோது அவர் குழப்பமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனிடம் விசாரித்தபோது, தனது தாயுடன் கருத்து வேறுபாடு இருந்ததால் இவ்வாறு செய்ததாக கூறினான்.
அவனது வயது மற்றும் குற்றவியல் ரீதியாக பொறுப்பேற்க சட்டப்பூர்வ திறன் இல்லாதது காரணமாக, அவன் மீது எந்தவித குற்றவியல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாது என்று தி டென்னஸியன் செய்தி வெளியிட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |