கால்பந்து பயிற்சி மைதானத்தில் கார் விபத்து: 10 வயது சிறுமி பலி! குடும்பத்தினர் கண்ணீர் இரங்கல்!
கால்பந்து பயிற்சி அமர்வில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நிலையில் சிறுமி குடும்பத்தினர் நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கால்பந்து பயிற்சி மைதானத்தில் கார் விபத்து
கால்பந்து பயிற்சி மைதானத்தில் நிகழ்ந்த திடீர் கார் விபத்தில் 10 வயது சிறுமி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பி அட்கின்சன் (Poppy Atkinson) என்ற 10 வயது சிறுமி, கம்பிரியாவில் உள்ள கெண்டல் ரக்பி கிளப்பில் புதன்கிழமை மாலை நடந்த இந்த கோர விபத்தில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கெண்டலைச் சேர்ந்த மற்றொரு எட்டு வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறை விசாரணை
கும்பிரியா காவல்துறை, லங்காஸ்டரைச் சேர்ந்த 40 வயது நபரை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளது.
"இந்த சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
குடும்பத்தின் உருக்கமான வார்த்தைகள்
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாப்பி "எங்கள் வாழ்க்கையின் மையப்புள்ளி" என்றும், அவரைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அவர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொழில்முறை கால்பந்து வீராங்கனையாக வேண்டும் என்றும், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட வேண்டும் என்றும் அவர் அசைக்க முடியாத லட்சியத்தைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பாப்பி "சின்னஞ்சிறிய, அழகிய" தங்கள் மகள் மற்றும் கால்பந்தின் மீதான அவரது ஆர்வத்தை சுற்றியே தங்கள் உலகம் சுழன்றது என்று தெரிவித்தனர்.
"அவள் ஒரு இயற்கையின் சக்தி. அவள் மிகவும் விசேஷமானவள், இந்த உலகத்திற்கு அவள் மிகச் சிறந்தவள்" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"பாப்பி விட்டுச் சென்ற வெற்றிடம் எங்கள் வாழ்க்கையிலும், எங்களைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கையிலும் மிகப்பெரியது. நாங்கள் மீண்டும் ஒருபோதும் முழுமையடைய மாட்டோம்" என்று குடும்பத்தினர் தங்கள் அளவிட முடியாத இழப்பை இரங்கல் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |