10 வயது சிறுமி மீது கொலை வழக்கு: பகீர் பின்னணி
10 year old girl booked for murder for throwing 18 month baby down stairwell: 18 மாதக் குழந்தை ஒன்றை, ஆறாவது மாடியிலிருந்து தூக்கி வீசிய 10 வயது சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் புறநகர்ப்பகுதியான Goregaon என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டுக்கு சமீபத்தில் ஒரு குடும்பம் குடிவந்துள்ளது.
குழந்தையை தூக்கி வீசிய சிறுமி
அந்த தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். 12 வயதில் ஒரு பையன், பிறந்து பதினெட்டு மாதமே ஆன ஒரு பெண் குழந்தை.

இந்நிலையில், கடந்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, தன் வீட்டின் அருகே ஒரு பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த அரிபா (Ariba Shakir Khan) என்னும் அந்தக் குழந்தை மாயமாகியுள்ளாள்.
அரிபாவை அவளது அண்ணன் தேட, தரைத்தளத்தில் அவளைப்போல யாரோ விழுந்துகிடப்பதைக் கண்டு தன் தாயை அழைத்துள்ளான் அந்தப் பையன்.
அலறியடித்துக்கொண்டு அந்தப் பெண் ஓட, குழந்தை அரிபா இரத்த வெள்ளத்தில் கிடத்துள்ளாள்.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அரிபாவைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், பொலிசார் அந்தக் கட்டிடத்திலிருந்த சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்ய, அதே வீட்டில் வாழும் 10 வயது சிறுமி ஒருத்தி, அரிபாவை தன்னிடம் அழைப்பது தெரியவந்துள்ளது.
அவள் அரிபாவைத் தூக்கி ஆறாவது மாடியிலிருந்து வீசியதாக கருதப்படும் நிலையில், அந்த சிறுமி மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அந்தச் சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட, சிறார் நீதி வாரியம் முன் ஆஜர் செய்யப்பட்டுள்ளாள் அவள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.