10 வயதில் ஐன்ஸ்டீனை மிஞ்சிய அறிவு குழந்தை! யார் இந்த கிரிஷ் அரோரா?
பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் வசிக்கும் 10 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கிரிஷ் அரோரா, தனது அசாதாரண அறிவுத்திறனால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அறிவுக்குழந்தை
மேற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 10 வயது இந்திய வம்சாவளி சிறுவன் கிரிஷ் அரோரா சமீபத்திய ஐக்யூ சோதனையில், அவர் 162 என்ற மதிப்பெண்ணைப் பெற்று, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளை விட உயர்ந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம், உலகின் மிகச் சிறந்த 1% அறிவாளிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
கணிதம் முதல் இசை வரை
கிரிஷின் அறிவுத்திறன் கணிதத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. இசையிலும் அவர் அபாரமான திறமையைக் காட்டியுள்ளார்.
வெறும் ஆறு மாதங்களில் நான்கு கிரேடுகளை முடித்து, டிரினிட்டி இசைக் கல்லூரியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்துள்ளார். தற்போது பியானோவில் 7 கிரேடுகளை முடித்துள்ளார்.
கிரிஷின் பெற்றோர்களான பொறியாளர்கள் மௌலி மற்றும் நிஷால் இருவரும் தங்கள் மகனின் அறிவுத்திறனை நான்கு வயதிலேயே கண்டறிந்ததாக கூறுகின்றனர்.
மேலும் நான்கு வயதிலேயே கணித புத்தகத்தை ஒரு நாளில் முடித்து, டெசிமல் கணக்குகளை எளிதாக செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |