பிரித்தானியாவில் பட்டப்பகலில் 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
சாலையில் நடந்து சென்ற 10வயது சிறுவனை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் பிட் புல் வகை நாய்களை வளர்க்க அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக சிலர் இந்த வகை நாய்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் சுமார் 2 வாரங்களுக்கு முன்பு பிட் புல் வகை நாயை ஆன்லைன் மூலம் வாங்கி வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாயை ஆன்லைனில் வாங்கிய உரிமையாளர் சாலையில் வாக்கிங் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது திடீரென பாய்ந்தது. நாய் உரிமையாளரால் அந்த நாயை கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறுவனின் தொண்டை பகுதியை கவ்விய நாய் கடித்து குதறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் நாயை பிடிக்க முயன்ற போது அது பொலிசாரை தாக்க ஆரம்பித்ததால் வேறு வழியின்றி மற்ற காவலர்கள் நாயை சுட்டு கொலை செய்தனர்.
நாய் கொலை செய்திருந்தாலும் இந்த கொலை நடக்க காரணமாக இருந்த உரிமையாளரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.