தண்டனை போதாது: இந்தியரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருத்தம்

Canada
By Balamanuvelan Jun 01, 2024 05:46 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

700 இந்திய மாணவர்களை ஏமாற்றிய நபர்

இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள்.

அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாயிற்று.

தண்டனை போதாது: இந்தியரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருத்தம் | 100 Of Students Who Were Cheated By Indian Are Sad

மோசடி நபருக்கு குறைவான தண்டனை

இந்நிலையில், சுற்றுலா விசாவில் கனடா வந்த மிஸ்ராவை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனேடிய பொலிசார் கைது செய்தார்கள். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம்

மிஸ்ராவுக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மிஸ்ராவால் ஏமாற்றப்பட்டவர்களில் பலர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படும் நிலை உருவானது. ஆனால், இப்போது அவர்களில் சிலருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளும், நீண்ட கால பணி அனுமதிகளும் வழங்கப்படும் வகையில் நிலைமை மாறியிருந்தாலும், தங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திய மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என அவர்கள் கருதுகிறார்கள்.

தண்டனை போதாது: இந்தியரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருத்தம் | 100 Of Students Who Were Cheated By Indian Are Sad

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான Ravinderpreet Singh(28) என்னும் இந்திய மாணவர் கூறும்போது, மிஸ்ராவால் என் வாழ்வில் பல ஆண்டுகள் வீணாகிப்போயின, மன அழுத்தத்தையும் பணப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன், அவருக்கு தண்டனை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியுள்ளார்.

இந்த இந்திய மாணவர்களுக்காக வழக்காடிய ரொரன்றோவை மையமாகக் கொண்ட புலம்பெயர்தல் சட்டத்தரணியான Sumit Sen என்பவர் கூறும்போது, மிஸ்ராவுக்கு குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையாவது விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

விடயம் என்னவென்றால், மிஸ்ராவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், ஏற்கனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவர் 19 மாதங்கள் மட்டும் சிறையில் செலவிட்டால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US