சீனாவில் பாலத்தை முழுமையாக மூடிய மூடுபனி! 100 மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து: வீடியோ
கடுமையான மூடுபனி காரணமாக சீனாவின் ஹெனான் நகரில் உள்ள பாலம் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாலத்தில் குவிந்த கார்கள்
சீனாவின் ஹெனான்(Henan) நகரில் உள்ள ஜெங்சின் ஹுவாங்கே பாலத்தில் டிசம்பர் 28ம் திகதி அதிகாலை முதலே சாலைகள் முழுவதும் பனி படர்ந்து இருந்ததுடன், கடும் மூடுபனி காரணமாக சாலைகள் முற்றிலும் மறைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மூடுபனியால் மறைக்கப்பட்டு இருந்த பாலத்தில் சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
More than 200 cars collided in a large-scale accident in cenral #China. One person died. pic.twitter.com/cR2kZ5YYue
— NEXTA (@nexta_tv) December 28, 2022
ஒரு வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் என அடுத்தடுத்து வந்த 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களில் பல சிதைந்த கார்கள் ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப்பட்டு இருப்பதைக் காட்டுகிறது. மேலும் பெரிய லாரிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணி தீவிரம்
சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய வாகன விபத்தில் இதுவரை எத்தனை வாகனங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சிக்கியுள்ளனர் என்ற எண்ணிக்கை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Zhengxin Huanghe Bridge(Twitter)
உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணி நிலவரப்படி, 11 பேர் தங்கள் வாகனங்களில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அத்துடன் பாலத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, இதில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 70 தீயணைப்பு மீட்புப் பணியாளர்கள் இதுவரை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Twitter)