500 நாட்களில் கோயம்புத்தூர் தொகுதியில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - அண்ணாமலை உறுதி
கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கோவை பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார்.
இதில், 500 நாட்களில் கோயம்புத்தூர் தொகுதிக்கு 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையின் அம்சங்கள்
* கோயம்புத்தூரில் என்.ஐ.ஏ கிளை, காமராஜர் பெயரில் கோவையில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்திய அரசின் உதவியுடன் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 6 சட்டமன்ற அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும்.
* கோயம்புத்தூரில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள ஆன்மீகத்தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோயம்புத்தூரில் ஐ.ஐ.எம். கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* சரவணப்பட்டியில் பொதுப்பூங்கா மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோயம்புத்தூரில் தேசிய புலனாய்வு அமைப்பினுடைய கிளை அலுவலகத்தை திறப்போம்.
* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |