லண்டனில் மக்களை ஈர்க்கும் 100 வருடங்கள் பழமையான வீராசாமி உணவகம்
லண்டனில் சுமார் 100 வருடங்களுக்கு மேலாக வீராசாமி என்ற இந்திய உணவகம் இயங்கி வருகின்றது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவின் காரணமாக தற்போது பிரபல்யமாகி வரும் இந்திய உணவகம் இதுவாகும்.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா
சுமார் 70 ஆண்டுக்காலமாக இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த 2-ம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயிர் நீத்தார்.
ஆகவே தற்போது மன்னர் சார்லஸ் அரியணையிலிருந்தாலும், உத்தியோகப்பூர்வமாக இதுவரை முடிசூட்டப்படவில்லை.
வருகின்ற மே மாதம் 6ஆம் திகதியன்று அவருக்கு முடிசூட்டும் விழா நடைபெறவுள்ளதால் லண்டன் நகரமே திருவிழா நடப்பது போன்று காட்சியளித்து வருகின்றது.
70 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் வீதிகளில் சிறப்பு விருந்து, கச்சேரி எனப் பல கோலாகலமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
வீராசாமி உணவகம்
சுமார் 100 வருடங்கள் பழமையான இந்த உணவகம் லண்டனில் இருக்கும் இந்திய உணவகமாகும்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான உணவு கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக இந்த உணவகம் இயங்கி வருகின்றது.
பெண் தொழிலதிபர் கேலியா பஞ்சாபி மற்றும் இந்தியச் சமையல் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளரான அனுதி விஷால் ஆகிய இருவரும் இணைந்து இதை நடத்தி வருகின்றார்கள்.
மேலும் லண்டன் நகரம் தற்போது விழாக்கோலமாகி வருவதால் பலர் மத்தியில் இந்த உணவகம் பிரசித்தி பெற்று வருகின்றது.
இந்திய உணவுகள் மற்றும் ஆங்கிலேயர்கள் உண்ணக்கூடிய உணவுகள் எனப் பல உணவு வகைகளைப் பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.