ஒரே நாளில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த 1000-க்கு மேற்பட்டோர்: ஆங்கில கால்வாயில் மேலும் சில உயிர்கள் பலி
வியாழக்கிழமை ஒரே நாளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து படகுகள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலப்பெயர்ந்தோர் பிரித்தானிய நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
ஆங்கிலக் கால்வாயில் சிறிய படகுகளில் உயிரைப் பணயம் வைத்து ஒரே நாளில் பிரித்தானிய கரையை அடைந்த அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் இதுவாகக் கருதப்படுகிறது.
இந்த பயணத்தில் நடுக்களடலில் மூழ்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பலர் கடலில் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுவதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது.
Photo: Alamy
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நான்கு எல்லைப் படை படகுகள் கரையோரத்தில் காணப்பட்ட புலம்பெயர்ந்த படகுகளை இடைமறித்து, எல்லைப் பாதுகாப்பு அவர்களை டோவருக்குள் அழைத்துச் சென்றது.
ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்கள் போர்வைகளால் போர்த்தப்பட்ட நிலையில் பத்திரமாக டோவரில் உள்ள பிரித்தானிய எல்லைக் காவலர்களால் கரைக்கு கொண்டுவந்தனர்.
Photo: Alamy
பல குழுக்களாக மக்கள் உயிர்பிழைப்பு படகுகள் மற்றும் எல்லைப் படையின் கப்பலில் கரைக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர், அவர்களுடன் RNLI அமைப்பினர் இணைந்து செயற்பட்டு அதிகமான மக்கள் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.
முன்னதாக, 2019-ஆம் ஆண்டில், பிரித்தனைய உள்துறைச் செயலர் பிரிதி படேல், 2020-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புலம்பெயர்ந்தோர் கடப்பதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுக்கும் என்று உறுதியளித்தார், மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இடம்பெயர்வு பாதையை சாத்தியமற்றதாக மாற்றுவதாக உறுதியளித்தார்.
அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த, பிரித்தானிய அரசாங்கம் பிரான்சுக்கு 54 மில்லியன் பவுண்டுகளை வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெயர்வு விகிதம் அதிகரித்துள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் (UNHCR) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு குறைந்தபட்சம் 1,00,907 பேர் மத்திய தரைக்கடல் வழியாக தரை மற்றும் கடல் வழியாக ஐரோப்பாவிற்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் 1,300-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் அல்லது காணவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.