பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம்
பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் விதத்தில் நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
One in, one out ஒப்பந்தம்
பிரித்தானியாவும் பிரான்சும் செய்துகொண்ட இந்த One in, one out என்னும் ஒப்பந்தம் என்பது என்னவென்றால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோதமாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.நிபந்தனை என்னவென்றால், அவர் இதற்கு முன் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றவராக இருக்கக்கூடாது!
ஒரே நாளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஆயிரம் புலம்பெயர்வோர்
இந்நிலையில், நேற்று நடந்த சில விடயங்கள் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளன.
நேற்றைய நிலவரப்படி, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயை சிறுபடகு மூலம் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த மூன்று பேர் இதுவரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
ஆனால், நேற்று, அதாவது வெள்ளிக்கிழமை, ஒரே நாளில் 13 படகுகள் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளன.
ஒரு படகில் சுமார் 82 பேர் வீதம், மொத்தம் 1,072 புலம்பெயர்ந்தோர் நேற்று ஒரே நாளில் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |