பிரித்தானிய கடற்கரை ஒன்றில் அசைவின்றி கிடத்த ஆயிரக்கணக்கான நண்டுகள்: நல்ல விடயமாம்
பிரித்தானிய கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான நண்டுகள் அசைவின்றிக் கிடந்ததைக் கண்ட மக்கள் திகைப்படைந்தார்கள்.
அருகில் சென்று பார்க்கும்போதுதான் தெரிந்தது, அவை உயிருள்ள நண்டுகள் அல்ல, நண்டுகளின் ஓடுகள் என்பது!
கடற்கரை ஒன்றில் அசைவின்றி கிடத்த ஆயிரக்கணக்கான நண்டுகள்
வடக்கு வேல்ஸிலுள்ள Aberffraw என்னுமிடத்தில் அமைந்துள்ள கடற்கரையில், ஆயிரக்கணக்கான உயிரற்ற நண்டுகள் கிடப்பதைக் கண்ட மக்கள் திகைத்துப்போனார்கள்.
ஆயிரக்கணக்கான spider crabs வகை நண்டுகள் கடற்கரையில் குவிந்து கிடப்பதைக் காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டன.
நல்ல விடயம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்
ஆனால், இதில் கவலைப்படவோ, பயப்படவோ எதுவும் இல்லை என்கிறார், Anglesey Sea Zoo என்னும் அமைப்பின் இயக்குநரான Frankie Hobro.
சொல்லப்போனால், இது நல்ல விடயம் என்கிறார் அவர். அதாவது, நண்டுகள், இறால் மீன்கள் போன்ற உயிரினங்கள், வளர்ச்சியின் ஒரு பாகமாக தங்கள் உடலின் மேலுள்ள ஓட்டை அகற்றுவது வாடிக்கைதான்.
ஆகவே, நண்டுகளின் ஓடுகள் கிடந்தாலே அவை இறந்த நண்டுகள் என எண்ணத் தேவையில்லை என்று கூறும் Frankie, ஆயிரக்கணக்கான நண்டுகள் வளர்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன என்பதையே இது காட்டுவதால், அது ஒரு நேர்மறையான விடயம்தான் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |