லண்டனில் குவிக்கப்படும் 1,000க்கு மேற்பட்ட பிராந்திய பொலிசார்: பிரதமர் ரிஷி சுனக் விடுத்த எச்சரிக்கை
நாடு முழுவதிலும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பொலிசார், லண்டனில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஆதரவு பேரணி
லண்டனில் ஏற்கனவே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் 2,000 பெருநகர பொலிசாருடன் அவர்களும் இணைவார்கள் என்றே கூறப்படுகிறது.
Credit: Alamy
சனிக்கிழமை 2 நிமிட மெளன அஞ்சலிக்கு பின்னர் மத்திய லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணி முன்னெடுக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையிலேயே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலவரம் வெடிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நாடு முழுவதிலும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பொலிசார் லண்டனில் குவிக்கப்பட உள்ளனர்.
லண்டனில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கூடுதலாக பிராந்திய பொலிசார் பணியில் இருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாலஸ்தீன ஆதரவு பேரணியில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை 100,000 தாண்டலாம் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பேரணியை தடை செய்வது என்பது நடைமுறை சாத்தியமல்ல என குறிப்பிட்டுள்ள பொலிஸ் தரப்பு, கடுமையான வன்முறை அச்சுறுத்தல் சட்டத்தின் கீழ் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
67 பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில்
பேரணிக்கு தடை விதித்தாலும், ஒரே பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதை பொலிசாரால் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல எனவும் விளக்கமளித்துள்ளனர்.
@afp
மட்டுமின்றி, அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு பின்னர் முன்னெடுக்கப்படும் இதுவரையான ஆர்ப்பட்டங்கள் அனைத்தும் அமைதியாகவே நடந்துள்ளது எனவும் காவல்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, நவம்பர் 2 மற்றும் 5ம் திகதிகளில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட 67 பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் வெறும் 8 பேர்கள் மட்டுமே கைதாகியுள்ளனர். இருப்பினும், கடந்த வார இறுதியில் மத்திய லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் 29 பேர்கள் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையிலேயே, நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்படும் பாலஸ்தீன ஆதரவு பேரணியால் கலவரம் வெடித்தால் காவல்துறை தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |