கண்ணாடி அணியாவிட்டால் 1,000 பவுண்டுகள் அபராதம்: பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை
பிரித்தானியாவில் சாரதிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி அணியாவிட்டால் 1,000 பவுண்டுகள் அபராதம்
அதாவது, மூக்குக் கண்ணாடி அணியும் வழக்கம் கொண்டவர்கள், வாகனம் ஓட்டும்போது கண்ணாடி அணிய மறந்தால் அவர்கள் 1,000 பவுண்டுகள் அபராதம் செலுத்த நேரிடும்.
மருத்துவர்கள் பரிந்துரையின்படி மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளவர்கள், அவசரமாக வெளியே செல்லும்போது கண்ணாடி அணிய மறந்துவிட்டால் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம்.
நெடுஞ்சாலை விதி 92இன்படி, மருத்துவர்கள் பரிந்துரையின்படி மூக்குக் கண்ணாடி அணிந்துள்ளவர்கள், வாகனம் ஓட்டும்போது கட்டாயம் கண்ணாடி அணிந்திருக்கவேண்டும்.
இல்லையென்றால், அவர்கள் நீதிமன்றம் செல்லவும், அபராதம் செலுத்தவும் நேரிடும் என்பதால், மறக்காமல் கண்ணாடி அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |