ஜேர்மனியில் இருளில் மூழ்கிய 10,000 வீடுகள்: தீ வைப்பு நாசவேலை காரணமா? விசாரணை தீவிரம்
ஜேர்மனியின் முக்கிய நகரில் ஏற்பட்ட மின் தடையால் கிட்டத்தட்ட 10,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது.
இருளில் மூழ்கிய 10,000 வீடுகள்
ஜேர்மனியின் Stuttgart நகருக்கு தெற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராய்ட்லிங்கன் நகரில் ஏற்பட்ட மின் தடையால் கிட்டத்தட்ட 10,000 வீடுகள் இருளில் மூழ்கி உள்ளது.
இந்த மின் தடையால் மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரும்பாலான தொலைபேசி தொடர்புகள் மற்றும் இணைய சேவைகளும் இந்த திடீர் மின் தடை காரணமாக முடங்கியுள்ளது.
அதிகாலை 2 மணிக்கு மின் விநியோகம் தடைபட்டு இருப்பதை மின்சார விநியோக நிறுவனமான Netze.BW உறுதிப்படுத்தியுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் கிட்டத்தட்ட 20,000 குடியிருப்பு பகுதிகளில் மின் தடையானது ஏற்பட்ட நிலையில், அதில் பாதி பேருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
ஆனால் மீதமுள்ள நபர்களுக்கும் எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை.
தீ வைப்பு நாசவேலை காரணமா?
மேலும் விசாரணையில், மின் விநியோக நிலையத்தில் 3 இடங்களில் தீ வைக்கப்பட்டு இருப்பதும், சுற்றுப்புற வேலியின் பகுதிகள் சேதமடைந்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இந்த மின் தடையானது திட்டமிடப்பட்ட நாசவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சந்தேகிக்கப்படும் நாச வேலையினால் கிட்டத்தட்ட பல மில்லியன் யூரோக்கள் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |