சொந்த தொழில் தொடங்க ரூ.10,000 இருந்தால் போதும்! சுலபமான 5 ஐடியாவை ட்ரை பண்ணுங்க
தற்போதைய சூழலில் ஒரு நிறுவனத்திற்கு சென்று வேலை செய்வதற்கு பதிலாக சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று தான் இளைஞர்கள் உள்பட பலரும் ஆசைப்படுகிறார்கள். அதற்கான 5 தொழில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் எந்தவொரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு முதலீடு தேவை. அதற்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால், இந்த ஈஸியான தொழிலுக்கு ரூ.10,000 இருந்தால் மட்டுமே போதுமானது.
ஊறுகாய் தொழில்
ரூ.10,000 ரூபாய் முதலீட்டில் ஒரு தொழில் துவங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஊறுகாய் தொழில் நல்ல முடிவாக இருக்கும். இந்திய உணவுகளில் கூடுதலாக ஊறுகாய் இல்லாமல் இருந்ததே இல்லை.
இந்த ஊறுகாயை தயாரிப்பதும் அவ்வளவு ஈஸியானது அல்ல.பல வகையான ஊறுகாய் தயாரிக்கும் திறன், சரியான ரெசிபி மற்றும் அது கெட்டுப் போகாத வகையில் சிறப்பாக பேக்கேஜிங் செய்வது போன்ற திறன்கள் உங்களிடம் இருந்தால் நீங்களும் இந்த தொழிலை தொடங்கலாம்.
பிளாகிங் (Blog)
பிளாகிங் செய்வதற்கு அதிக அளவில் முதலீடு வேண்டும் என்று அவசியமில்லை. இப்போது, பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் கூட பிளாக்கர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள்.
இதற்கு நீங்கள் சுவாரஸ்யமான வீடியோக்கள் மற்றும் போஸ்ட்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.
யோகா கிளாஸ்
தற்போதைய காலத்தில் யோகாசனம் செய்வது என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அதற்கு, எல்லோரும் தகுந்த ஆசானை தேடி வருகின்றனர்.
உங்களுக்கு முறையாக யோகா தெரியும் என்றால் வீட்டிலிருந்தோ அல்லது கம்யூனிட்டி சென்டரிலோ ரூ.10,000 முதலீடு செய்து யோகா வகுப்புகள் நடத்தலாம். இதன் மூலமும் நல்ல வருமானத்தை நீங்கள் பெறலாம்.
டிபன் சர்வீஸ்
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த டிபன் சர்வீஸ் அரிய வாய்ப்பு. அதுவும் ரூ.10,000 முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கு நல்ல தேர்வு. தற்போதைய காலத்தில் கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர்.
அவர்கள், நேரத்தை குறைப்பதற்காக டிபன் சர்வீஸை தேர்வு செய்கின்றனர். தரமான உணவு வேண்டும் என்பதற்காக விலை அதிகமாக இருந்தாலும் இதனை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் வீட்டில் இருந்துகொண்டே நல்ல வருமானத்தை பெறலாம்.
ஆன்லைன் ஃபிட்னஸ் இன்ஸ்டிரக்டர்
வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் உடலையும் நாம் பேணிபாதுக்காக வேண்டும். பெரும்பாலானோர், ஃபிட்டாகவும் கட்டுக்கோப்பாகவும் வைப்பதற்கான அவசியத்தை உணர்ந்துள்ள்ளார்கள். முக்கியமாக, சிலருக்கு வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்வதற்கு ஆசைப்படுவார்கள்.
அவர்களுக்கு நீங்கள் ஆன்லைன் ஃபிட்னஸ் இன்ஸ்டிரக்டராக இருக்கலாம். அதற்கு உங்களுக்கு உடற்பயிற்சி பற்றிய அறிவும், திறன்களும் இருப்பது அவசியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |