பிரான்சில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மரணம்! என்ன காரணம்? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
பிரான்சில் கடந்த ஆண்டில் குடும்ப வன்முறையில் 102 பெண்கள் உயிரிழந்திருப்பதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள், கடந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே போடப்பட்டு வந்துவிட்டது.
இதனால் வீட்டில் அடங்கிக் கிடக்கும் போது, குடும்பத்தினரிடையே அதிக பிரச்சனை வர வாய்ப்புள்ளது. குறிப்பாக மனைவி மற்றும் கணவனிடையே சண்டை வர வாய்ப்புள்ளது.
அப்படி கணவனால் பெண்களுக்கு இந்த ஊரடங்கில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அரசின் பாதுகாப்பு எண்ணுக்கு அழைக்கும் படி பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் 102 பெண்கள் குடும்ப வன்முறை காரணமாக ஊயிரிழந்துள்ளனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin கூறுகையில், குடும்ப வன்முறையில் சிக்கி 102 பெண்கள் உயிரிழந்துள்ள்ளனர்.
உயிரிழந்த பெண்கள் தமது கணவர்களால் அல்லது முன்னாள் கணவர், காதலனால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குடும்ப வன்முறைக்கு எதிராக பொலிசார் மற்றும் ஜொந்தாமினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.