புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம்
புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, பிரித்தானியாவில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை தீர்க்கப் பாருங்கள் என 105 தொண்டு நிறுவனங்கள் பிரித்தானிய உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளன.
105 தொண்டு நிறுவனங்கள் கடிதம்
பிரித்தானிய அரசியல் புலம்பெயர்தலையே சுற்றி சுற்றி வருகிறது. ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பவர்களும், இருக்கும் பதவியை தக்கவைத்துக்கொள்ள தவிப்பவர்களும் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் புலம்பெயர்தலாகிவிட்டது.
இந்நிலையில், பிரித்தானியாவில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதை விட்டுவிட்டு புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதையே செய்துகொண்டிருக்காதீர்கள் என்கின்றன தொண்டு நிறுவனங்கள்.
அகதிகளை பலிகடா ஆக்காதீர்கள் எனக்கூறும், Refugee Action என்னும் தொண்டு நிறுவனம் முன்வைத்துள்ள கடிதம் ஒன்றில் 105 தொண்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
வீடுகள் தட்டுப்பாடு, பருவநிலை நெருக்கடி, NHS பிரச்சினைகள் என பிரித்தானியாவில் ஏராளம் பிரச்சினைகள் உள்ளன. பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் நாடகம் போடுவதை விட்டுவிட்டு அவற்றை சரிசெய்யப் பாருங்கள் என்கின்றது அந்தக் கடிதம்.
பிரச்சினைகளை விட்டுவிட்டு அகதிகளைக் குறிவைப்பதால் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவோ மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவோ செய்யாது எனக்கூறியுள்ள அந்தக் கடிதம், அது உண்மையான பிரச்சினைகளிலிருந்து நமது சமுதாயத்தை திசை திருப்பி அப்பாவிகளை பலிகடா ஆக்கத்தான் உதவும் என்றும் கூறுகிறது.
பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமானால், இந்த வெறுப்பூட்டும் கொள்கைகளின் உண்மையான விளைவுகளை எதிர்கொள்ளும் உள்ளூர் அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அகதிகளுடனும் இணைந்து செயல்படவும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதை வலியுறுத்தியுள்ளது அந்தக் கடிதம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |