106 வயது பிரித்தானிய பெண்ணுக்கு பிரதமரிடமிருந்து கௌரவ விருது! யார் அவர்? அப்படி என்ன செய்தார்?
பிரித்தானியாவில் 106 வயதான பெண் ஒருவர் படைத்த சாதனைக்காக பிரதம மந்திரியிடமிருந்து பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருதைப் பெற்றுள்ளார்.
சிறந்த தொண்டு செய்ய வயது ஒரு தடையல்ல என்பதை நூறு வயதைக் கடந்த பிரித்தானிய பெண் ஒருவர் நிரூபித்துள்ளார்.
இரண்டு முறை மாரடைப்பிலிருந்து மீண்ட 106 வயதான ஜோன் வில்லெட் (Joan Willett) என்ற அப்பெண்ணுக்கு, அவரது வியக்கத்தக்க வயதுக்கு மட்டுமே பெருமை கொண்டவர் அல்ல, அதற்க்கு மேலாக பல காரணங்களுக்காக ஒரு அற்புதமான நபர்.
Picture: Simon Booth / British Heart Foundation
பெரும்பாலான மக்கள் இந்த வயதில் ஓய்வெடுக்கவும் குணமடையவும் தேர்வு செய்தபோதும், குறிப்பிடத்தக்க பல உடல்நலப் பிரச்சினைகளை அனுபவித்த வில்லெட், இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 60,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூபா. 2.4 கோடி) திரட்டினார்.
இந்த நிதியை அவர் திரட்டுவதற்காக அவர் தனது 104-வது பிறந்தநாளில் 17 மைல் தூரம் நடந்து சாதனை படைத்துள்ளார்.
Picture: Simon Booth / British Heart Foundation
80-களில் மாரடைப்பிலிருந்து உயிர் பிழைத்த முன்னாள் ஆசிரியரான ஜோன் வில்லெட், வாழ்க்கையில் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை மற்றவர்களுக்கு உதவவும், தொண்டுக்காக பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்தியுள்ளார்.
இப்போது அவரது 107-வது பிறந்தநாளுக்கு முன்னதாக, அவர் பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக்கிடமிருந்து பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருதைப் (Points of Light Award) பெற்றுள்ளார்.
Picture: Simon Booth / British Heart Foundation