10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு பிறப்பித்த உத்தரவு
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான பெயர்ப்பதிவை, பிறப்புச் சான்றிதழில் உள்ளபடியே பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பிறப்பித்த உத்தரவு
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார்.
மாணவர்களின் பெயரில் இனிஷியல் மற்றும் பெயருக்கு இடையே புள்ளி வைக்காமல், இடைவெளி மட்டும் விட வேண்டும்.
இரண்டு இனிஷியல்கள் இருந்தால், அவற்றுக்கு இடையேயும் ஒரு இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பெயரில் எழுத்துப் பிழை இருந்தால், தேவையான எழுத்துகளை மட்டும் திருத்திக் கொள்ளலாம்.

மாணவர்களின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும்போது, இனிஷியலும் தமிழிலேயே இருக்க வேண்டும்.
மேலும், EMIS இணையதளத்தில் தமிழில் பதிவேற்றப்படும் மாணவர் விவரங்கள் அனைத்தும் UNICODE முறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளில் 14 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது தவறுகள் ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |